பக்கங்கள்

பக்கங்கள்

14 ஆக., 2015

ஜனவரி 08 மக்கள் கருத்திற்கு தலை குனிந்து செயற்பட்டதனை போன்று தேர்தலில் கிடைக்கும் மக்கள் கருத்திற்கு தலைகுனிந்து செயற்படுவேன்மஹிந்தவின பதில் கடிதம்


குருணாகல் மாவட்ட முன்னணி வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று காலை கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு பதில் கடிதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கடிதத்தில் மூன்று அம்சங்களை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது,
நேற்று தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் முன்னணி வெற்றி பெறும் என கூறியமைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்
அத்துடன் எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் நிராகரிக்கின்றேன்.
நான் ஜனவரி மாதம் 08ம் திகதி மக்கள் கருத்திற்கு தலை குனிந்து செயற்பட்டதனை போன்று எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கிடைக்கும் மக்கள் கருத்திற்கு தலைகுனிந்து செயற்படுவேன்.