பக்கங்கள்

பக்கங்கள்

16 ஆக., 2015

யாழ் தமிழரசு கட்சியின் காரியாலயம் மீது இரவு 11.20 மணிக்கு கைக் குண்டுத் தாக்குதல்


வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயற்பாடுகளை கட்சி தொண்டர்கள் மேற்கொண்டு இருந்த போது அதனை குழப்பும் நோக்கில் இத்தாக்குதல்
இடம்பெற்றுள்ளது
இத்தாக்குதலானது மாவை சேனாதி ராஜா, ஸ்ரீகாந்தா ஆகியோர் கட்சி தொண்டர்களோடு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டபோது  இடம்பெற்றது
மேலும்  சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவின் காரியாலயம்  மீதும் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலினால் எவருக்கும் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது