பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2015

போதைப்பொருள் கும்பலை வேட்டையாடிய பொலிஸ்: 13 பேர் கைது


கடந்த 2 மாதங்களில் இது 5-வது முறையாக பெர்னேஸ் பொலிசார் Schützenmatte பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து கடந்த மே மாதமே பேர்ன் நகர அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் திடீரென நடத்திய இந்த அதிரடி சோதனையில் போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த ஒருவரை பொலிசார் கைது செய்தனர்.
பொலிசாரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் குதித்த அந்த ஆசாமி காயங்களுடன் உயிர் தப்பியாதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சோதனையில் போதைப்பொருள் மற்றும் கத்தையாக பணமும் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 10க்கும் அதிகமானவர்களை கைது செயுதுள்ளதாகவும் அவர்களை கூடிய விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.