பக்கங்கள்

பக்கங்கள்

13 ஆக., 2015

தநதை செல்வா 1947ல் தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்மென்ற செய்தியை வெளிப்படுத்தியிருந்தார்: குருகுலராஜா

 
வன்னிமாவட்டம் முல்லைத்தீவில் நேற்று பாண்டியன்குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செந்தூரன் தலைமையில் நடைபெற்றது....
இதில் கலந்துகொண்ட வடக்கு மகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜா உரையாற்றுகையில்,
எமது மக்களுக்கு ஒரு சுயாட்சி வேண்டுமென்ற சிந்தiனையை தந்தை செல்வா அவர்கள் 1947ம் ஆண்டு தனது சிம்மாசன உரையொன்றில் தெரிவித்துள்ளார்.
அத்தகைய பின்னணியில்தான் தமிழ் மக்களின் பயணம் கடந்து வந்துள்ளது.அது இன்றுவரை தீராத தாகமாக இருக்கின்றது என தெரிவித்தார்.