பக்கங்கள்

பக்கங்கள்

6 ஆக., 2015

மைத்ரிபால சிறிசேன 2008 ம் ஆண்டில்தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சுகவீனமுற்றிருந்த ஆனந்த விதான ஐ சந்தித்தார்

 விவசாய அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து
சுகவீனமுற்றிருந்த ஆனந்த விதான அவர்களின் உடலாரோக்கியம் தொடர்பாக விசாரிப்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (05) மாலை பிலியந்தலையில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
தனது நீண்டகால நண்பராகவும் விவசாய அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகராக சேவை புரிந்த ஆனந்த விதான அவர்களின் உடல் நலம் தொடர்பாக விசாரித்ததுடன் அவருடைய சிகிற்சை தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி அவர்கள் அவரது குடும்ப உறவினர்களோடு கலந்துரையாடினார்.
2008 ம் ஆண்டு அக்டோபர் 09ம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த பின்னர் அவருடைய உடல்நிலையினை சகஜநிலைக்கு கொண்டுவருவதற்கு தேவையான உதவிகளை புரிந்த மைத்ரிபால சிறிசேன அவர்கள் தொடந்து அவர் தொடர்பாக விசேட அவதானத்துடன் செயற்பட்டார். அத்துடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரரும் தனது வேலைப்பழுவுற்கு மத்தியிலும் நேற்று மாலை ஜனாதிபதி அவர்கள் இவருடைய நலம் விசாரிப்பதற்காக சென்றார்.https://www.facebook.com/maithripalas/posts/10153440870926327?comment_tracking=%7B%22tn%22%3A%22O%22%7D
Maithripala Sirisena இன் புகைப்படம்.