பக்கங்கள்

பக்கங்கள்

9 ஆக., 2015

வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினூடாக யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு


 வாழ்வின் எழுச்சிஅபிவிருத்தித்திணைக்களத்தினூடாக யாழ்மாவட்டத்தின் அபிவிருத்திக்கு23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்என்.வேதநாயகன்
 தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாவட்டத்தின்சகல பகுதிகளிலும் 1032வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. விவசாயம்,மீன்பிடி,கால்நடை, சந்தைப்படுத்தல் மற்றும்கைத்தொழில் ஆகிய பிரிவுகளின்கீழ் தெரிவு செய்யப்படும்பயனாளிகளுக்கு 75,000ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் மேலும் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களினூடாகவும் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.