பக்கங்கள்

பக்கங்கள்

19 ஆக., 2015

ரணில் பிரதமராக நாளை பதவிப் பிரமாணம்; அமைச்சரவையில் 30 பேருக்கு மட்டும் இடம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க நாளை வியாழக்கிழமை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.
தற்போதைய நிலையில் 113 நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலத்துக்கு தேவையான உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சுதந்திரக் கட்சியின் ஒரு சில உறுப்பினர்கள் அதற்கான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.
நாளை பிரதமர் பதவியேற்ற பின்னர் 30 பேர் கொண்ட அமைச்சரவையும் நியமிக்கப்படவுள்ளது.
இதேவேளை தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் வெளியில் இருந்து அதற்கு ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எனினும் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.