பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2015

சுவிஸ் நாதன் ஊரதீவு ச ச நிலையத்துக்கு 60கதிரைகளை அன்பளிப்பு செய்தார்

 நிலையத்தின் நீண்டகால அபிவிருத்தியின் பொருட்டும் எமது வேண்டுகோலுக்கு அமைவாகவும்
தாய் மண்மீது அதீத பற்றுகொண்ட சுவிஸ் நாட்டில் வசித்து வரும் T.கமலநாதன் (நாதன்) அவர்களால் சுமார் 60 கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டது என்பதை எமது உள்நாட்டு மற்றும் புலம்பெயர் சொந்தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம். அன்பளிப்பினை நிலைய பொருளாளர் அவர்கள் தலைவரிடம் கையளித்துள்ளார்.
நீண்ட காலமாக உறங்கியிருந்த எமது நிலையமானது மீள ஆரம்பித்து போதிய வளங்கள் எதுவுமின்றி இன்னல்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. எமது நிலைய வளர்ச்சிக்கு நாதன் அவர்கள் போன்று சமூக பற்றுள்ள நல்உள்ளங்களின் ஆதரவு மிக அவசியயமானது.