பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2015

மதுக்கடைக்கு எதிராக 99 வயதில் போராடிய வைகோ தாயாரை நேரில் பாராட்டிய நல்லகண்ணு!

மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாளை, இந்திய கம்யூனிஸ்ட் கடசியி
ன் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நேரில் சந்தித்து பாராட்டினார்.

நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி,  மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 99 வயதான தாயார் மாரியம்மாள் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கலிங்கப்பட்டி மதிமுக பொதுசெயலாளர் வைகோ இல்லத்திற்கு நேரில் வந்து அவரை சந்தித்தார்​.

அப்போது, வைகோவின் தாயார் மாரியம்மாளை பாராட்டி சால்வை அறிவித்தார். மேலும், கலிங்கப்பட்டி மதுக்கடை போராட்டத்தில் காயம்பட்டுள்ள வைகோ சகோதரர் வை.ரவிச்சந்திரனிடம், நல்லகண்ணு நலம் விசாரித்தார்.