பக்கங்கள்

பக்கங்கள்

23 ஆக., 2015

கோத்தபாயவிடம் நாளை விசாரணை



 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்விடம் நாளை திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படவுள்ளது.
பாரியளவிலான மோசடிகள், குற்றச் செயல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக் குழுவினால் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது.
அதிகார துஸ்பிரயோகம், அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களே இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இதேவேளை சர்ச்சைக்குரிய லக்னா லங்கா நிறுவன கொடுக்கல் வாங்கல்கள், 2015ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலின் போது நிறுவனப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டமை குறித்தும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 14ம் திகதி கோத்தபாய ராஜபக்ச ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு கோரப்பட்டிருந்தார்.
எனினும் பொதுத் தேர்தல் நடத்தப்படவிருந்த காரணத்தினால் விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.