பக்கங்கள்

பக்கங்கள்

20 ஆக., 2015

தேசிய அரசாங்கம் தொடர்பில் சமல் ராஜபக்சவின் இல்லத்தில் கலந்துரையாடல்!


தேசிய அரசாங்கமாக தொடர்ந்து செயற்படுகின்றமை தொடர்பில் சுதந்திரக் கட்சியில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ள உறுப்பினர்களின் கருத்துக்களை ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழு இதுவரையில் ஆயத்தமாகியுள்ளது.
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிதாக நாடாளுமன்றிற்கு தெரிவாகியவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தெரிவாகியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு எதிர்வரும் அரசியல் நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக இச் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது