பக்கங்கள்

பக்கங்கள்

21 ஆக., 2015

மக்கள் ஆணையை புதிய அரசாங்கம் மதிக்குமாயின் ஆதரவளிக்கப்படும்: தலைவர் சம்பந்தன்



பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி ஆட்சி அமைத்துள்ள சிங்கள அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்துக்கு விரோதமான
போக்குடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செயற்படாது எனத் தெரிவித்த தலைவர் சம்பந்தன், அக்கட்சியின் நல்லாட்சிக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தேர்தலுக்குப் பின்னரான கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் தொடபில் எமது செய்திப்பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் மக்களால் வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையில் புதிய அரசாங்கம் தொடர்ந்து செயற்படும் பட்சத்தில், அதற்கான ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்கும் என்று அவர் கூறினார்.
மேலும் தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ள மக்கள் ஆணை மதிக்கப்படும் எனவும் தலைவர் சம்பந்தன் எமது செய்திப் பிரிவுக்கு உறுதியளித்தார்.