பக்கங்கள்

பக்கங்கள்

5 ஆக., 2015

நாட்டை விட்டு தப்பி செல்லவுள்ள ராஜபக்சவின் மகன்?


பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவுள்ள ராஜபக்சவின் மகன் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜபக்சவின் மகன் மற்றும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் 4 பேருடன் இணைந்து டுபாயில் நடைபெறவுள்ள விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளதாக கூறி அவர் இவ்வாறு வெளிநாடொன்றிற்கு தப்பி செல்ல தி்ட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
றகர் வீரர் தாஜுடீனின் மரணம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் ராஜபக்சவின் மகன் கடந்த காலங்களில் வெளிநாட்டில் வசித்து வந்துள்ளதுடன் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக மஹிந்த ராஜபக்ச நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாடு செல்வதற்கான விருப்பத்தினை தன்னிடம் கேட்க வேண்டாம் என மஹிந்த ராஜபக்சவினால் மகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஷிராந்தியினால் இதற்கான அனுமதி வழங்கப்படுள்ளதாகவும் கூறப்படுகின்றது.