பக்கங்கள்

பக்கங்கள்

22 ஆக., 2015

தேசியப்பட்டியல் மூலம் தெரிவானார் அங்கஜன்


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள்
வெளியிடப்பட்டுள்ளன. அதில் அங்கஜன் ராமநாதனும் தெரிவாகியுள்ளார்.
 
அங்கஜன் உள்ளிட்ட 12 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 11 பேர் முன்னாள் அமைச்சர்களாவர்.
 
தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட அங்கஜன் மக்களுக்கான தனது சேவை தொடரும் என்றார்.