பக்கங்கள்

பக்கங்கள்

22 ஆக., 2015

மைத்திரி-மூன் விரைவில் சந்திப்பு


ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அடுத்தமாதம்  நியோர்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். 
 
நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்தி முடித்தமை தொடர்பில் தொலைபேசியூடாக பான் கீன் மூன் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்த போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்ட இணக்கத்தை தெரிவித்துள்ளார்.
 
ஐ.நா.வின் பொதுச்சபையமர்வு அடுத்த மாதம் நியோர்க்கில் நடைபெறவிருப்பதுடன் அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.