பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2015

தமிழ்மக்கள் செயற்படவேண்டிய நிலை குறித்து யாழ்.பல்கலை ஆசிரியர் சம்மேளனம் விளக்கம்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் செயற்படவேண்டிய நிலை குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய சமூகங்களை போன்று தமிழ் சமூகமும் வாழவேண்டும் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கான தீர்வு அமையவேண்டும்.
இதனைதவிர தமது கலாசாரம், குடிபரம்பல், போன்றவற்றை காக்கக்கூடிய அளவில் வாக்களிப்பு அமையவேண்டும். பெரும்பான்மை அரசியல்வாதிகளின் அரசியல் நோக்க அழுத்தங்களுக்கு ஆட்பட்டுவிடக்கூடாது.
மலையக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள எமது தலைவர்கள் உரிய முனைப்பை காட்டவில்லை. சர்வதேச நியமங்களுக்கு அமைவான முறையில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும், மாறாக ஆக்ரோசமான கோசங்களினால் உரிமைகளை வென்றெடுக்க முடியாது.
கடந்த காலங்களில் பெரும் எண்ணிக்கையிலான உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் ஏற்பட்டிருந்தன. எதிர்காலத்தில் எவ்வித இழப்புக்களும் ஏற்படாத வகையில் உரிமைகளையும் பிரச்சினைகளையும் தீர்வுத்துக் கொள்ளக் கூடிய வகையில் மக்களின் வாக்களிப்பு அமைய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.