பக்கங்கள்

பக்கங்கள்

13 ஆக., 2015

தமிழ் மக்களை இனவாத ரீதியாக சூடேற்றி அதனூடாக குளிர்காய எத்தணித்தவர்களுக்கு தேர்தல் சவால்


 தமிழ் மக்களை இனவாத சாக்கடைக்குள் தள்ளி இனவாத ரீதியாக சூடேற்றி அதனூடாக குளிர்காய எத்தணித்தவர்களுக்கு  இந்த நாடாளுமன்ற தேர்தல் சவால்
இவ்வாறு தெரிவித்தார் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட முதன்மை  வேட்பாளர் சந்திரசேகரன்.

இன்று காலை 11 மணியளவில் பண்டியன் தாழ்வில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இரண்டு கோடி மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் இத் தேர்தலில் 1978ம் ஆண்டிற்கு பிறகு எமக்கு கிடைத்த சந்தர்ப்பம் இதுவாகும்.

 மகிந்தவின் கொடூர  ஆட்சி முடிந்தும் மீண்டும் மகிந்த ஆட்சிக்கு வருவாரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.நாம் திட்டவட்டமாக கூறுவோம் மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்,வரவும் விடமாட்டோம் என்றார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற 58லட்சம் வாக்குகளும் மீள கிடைக்கும் என்ற தோரணையில் மகிந்த உள்ளார்.அவரது எண்ணம் ஈடேறாது
அதேபோல மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலும் லஞ்ச ஊழல் மலிந்த உறுப்பினர்கள் உள்ளனர்.ரணில் நாட்டை சூறையாட முயற்சிக்கிறார்.ஆகவே இரண்டு கும்பலும் இனவெறியை தூண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றார்.