பக்கங்கள்

பக்கங்கள்

8 ஆக., 2015

அதிகாரப்பகிர்வை வழங்காத நாடுகளே இரண்டாகப் பிளவு


 அதிகாரப்பகிர்வு இடம்பெற்ற நாடுகள் உலகில் பிரிந்ததாக இல்லை என்றும், அதிகாரப்பகிர்வை முன்வைக்காத நாடுகளே பிரிந்துள்ளன என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும்
அமைச்சருமான ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
 
கேள்வி நேரத்தின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டி கோரிக்கையை மையப்படுத்தி அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
தனி ஈழத்துக்கான கோரிக்கை தற்போது மழுங்கிவிட்டது. புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் அந்தக் கோரிக்கையை கைவிட்டுள்ளன. மஹிந்த வெளிநாடு சென்றால் புலம்பெயர் தமிழர்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் சென்றபோது அவருக்கு எதிராக சுமார் 136 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். அன்று 10 ஆயிரமாக இருந்த எதிர்ப்பு இன்று 136 ஆகக் குறைந்துள்ளது. இதிலிருந்து தனி ஈழம் என்ற கோரிக்கை கைவிடப்பட்டுள்ளது என்பது புலனாகிறது.
 
பொதுத்தேர்தலில் சுயேச்சைக் குழுவாகக் களமிறங்கியுள்ள முன்னாள் புலிகள்கூட அதிகாரப்பகிர்வையே கோரியுள்ளனர்.
 
இந்தியாவில் ஒற்றையாட்சி நிலவினாலும் அங்கு சமஷ்டி முறையின்கீழ் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. உலகில் அதிகாரங்கள் பகிரப்பட்ட நாடுகள் பிரிந்ததில்லை. மாறாக அதிகாரங்கள் பகிரப்படாத நாடுகளே பிரிந்துள்ளன - என்றும் அமைச்சர் ராஜித மேலும் தெரிவித்தார்