பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2015

சிம்புக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி

வாலு' படம் பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துக்கள்!" என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்புவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு
பேசியுள்ளார்.
ரஜினியின் இந்த திடீர் வாழ்த்தால் சிம்பு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். 

பல்வேறு பிரச்னைகளை கடந்து, வரும் 14ஆம் தேதி 'வாலு' படம் திரைக்கு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 300 தியேட்டர்களிலும், உலகம் முழுவதும் 1,000 தியேட்டர்களிலும் படம் திரையிடப்பட இருக்கிறது.

சிம்பு, ஹன்சிகா மோத்வானி, சந்தானம் ஆகியோர் நடித்துள்ள 'வாலு' படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். விஜய் சுந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை, நிக் ஆர்ட்ஸ் நிறுவனமும், மேஜிக் ரேஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இந்நிலையில், 'வாலு' படம் வெற்றியடைய நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிம்புவை நேரடியாக போனில் தொடர்பு கொண்டு, "படம் பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துக்கள்!" என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் தன்னை போனில் தொடர்பு கொண்டு பேசியது சிம்புவிற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.