பக்கங்கள்

பக்கங்கள்

6 ஆக., 2015

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை








திருகோணமலையில் வைத்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இவரது ஆதரவாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பின்போது சட்ட விரோதமான முறையில் செயற்பட்ட குற்றத்தின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்த இவர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 10.00 மணிக்கு தபால் மூல வாக்களிப்பு நடைபெற்று வரும்  கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு சென்று வாக்களிப்புக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் அவருடைய ஆதரவாளரும்,  மாலை 3.20 மணியளவில் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும் இருவரும் தலா 50,000 ரூபாய் அபராதத்துடனான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.