பக்கங்கள்

பக்கங்கள்

22 ஆக., 2015

யாழில் மர்மப்பொருள் வெடித்தலில் தம்பதியினர் படுகாயம்


 யாழ். சாவகச்சேரி சரசாலை பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் கணவன் மனைவி இருவரும் முகத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்
.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதன்போது 30 வயதுடைய சடையன் வர்ணன் மற்றும் 26 வயதுடைய வர்ணன் பேபிவாணி ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.
 
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
 
தம்பதியினர் இருவரும் நேற்று காலை தமது வீட்டின் காணியினை துப்பரவு செய்து குப்பைகளை எரிக்கும் போதே இந்த வெடி விபத்து இடம்பெற்றுள்ளது.
 
இதன்போது இருவரின் முகத்திலும் வெடி காயங்கள் ஏற்பட்ட நிலையில் இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
மேலும் இந்தநிலையில் இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.