பக்கங்கள்

பக்கங்கள்

16 ஆக., 2015

இந்திய அணியை திட்டம் போட்டு வீழ்த்தினேன்: ஹேராத்

இந்தியாவுக்கு எதிரான 2வது இன்னிங்சில் தனது திட்டம் சிறப்பாக கைகொடுத்ததாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹேராத் தெரிவித்துள்ளார்.

இந்தியா- இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்தது.
இதில் 2வது இன்னிங்சில் சுழலில் இந்தியாவை மிரட்டிய இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹேராத் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால் வெற்றிக்கு மிக அருகில் வந்த இந்திய அணி 112 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 63 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
போட்டி முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசிய ஹேராத், நான் முதல் இன்னிங்சில் சிறப்பாக செயல்படவில்லை. அதன் பிறகு எனது பந்துவீச்சு பயிற்சியாளரிடம் ஆலோசனை நடத்தினேன்.
இதனால் 2வது இன்னிங்சில் சிறப்பாக செயல்பட திட்டம் போட்டேன். அதற்கு ஏற்றார் போல் ஆடுகளமும் நல்ல நிலையில் இருந்ததை உணர்ந்தேன். அனைத்தும் எனக்கு கைகொடுத்தது என்று தெரிவித்துள்ளார்.