பக்கங்கள்

பக்கங்கள்

19 ஆக., 2015

மகிந்த கட்சியினர் ரணிலுடன் இணைவு


நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டியதை அடுத்து மகிந்த கட்சியினர் பலர் ரணிலுடன் இணைந்து கொள்ளப் போவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாளையோ, நாளை மறுதினமோ ரணில் பிரதமராக பதவியேற்கவிருக்கும் நிலையில் உத்தியோகபூர்வமாக மகிந்த கட்சியினர் ரணிலுடன் இணைவதற்காக அவசர அவசரமாக சந்தித்து பேச்சுக்களை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இணைந்து கொள்பவர்களின் பெயர் விபரங்கள் நாளை வெளிவரும் எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.