பக்கங்கள்

பக்கங்கள்

26 ஆக., 2015

தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள டக்ளஸ் விருப்பம்


தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்த டக்ளஸ் தேவானந்தா,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை டக்ளஸ் தேவானந்தா அண்மையில் சந்தித்துப் பேசியதை, அவரது ஊடகப் பேச்சாளர் நெல்சன் எதிரிசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை வகித்த கூட்டணியின் ஆட்சிக் காலங்களில் ஈ.பி.டி.பி. இணைந்திருந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தது.
கடந்த தேர்தலில் 3 ஆசனங்களைப் பெற்றிருந்த அக்கட்சி இப்போது ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றமை குறிப்பிடத்தக்கது.