பக்கங்கள்

பக்கங்கள்

23 ஆக., 2015

யுத்தம் மீண்டும் வராமல் இருக்க செயற்படுகின்றோம் - சம்பூரில் ஜனாதிபதி




திருமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து
விடுவிக்கப்பட்டுள்ள
காணிகளின் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கியிருந்தார்.
இக் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரி உரையாற்றுகையில்

யுத்தம் சத்யத்தை இல்லாமல் செய்து விடுகிறது. யுத்தம் கருணை, அன்பு, இரக்கம் என்பவற்றை இல்லாமல் செய்து விடுகிறது. எனவே இவையனைத்தும் யுத்தத்தால் இல்லாமல் போய்விடுகிறது.

எனவே யுத்தம் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமானது அல்ல.

எமது புதிய அரசாங்கம் மீண்டும் இந்நாட்டில் ஒரு யுத்தம் வராமல் இருக்கக்கூடிய விதத்தில்தான் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம் என தெரிவித்திருந்தார்.

அத்தோடு சம்பூரில் பிரசித்திபெற்ற பத்திரகாளி அம்மன் ஆலயத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்து சமய வழிபாட்டில் ஈடுபட்டதுடன் அடிக்கல்லும் ஈட்டியுள்ளார்.

மேலும் இவ் வைபவத்தில் சந்திரிக்கா குமாரதுங்க, ஹக்கீம், இரா.சம்பந்தன்  உட்பட இன்னும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்திருந்தனர்.