பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2015

இலங்கை புகலிடக்காரர்கள் நாடு திரும்ப வேண்டும்: சுவிஸ் எப்டிபியின் தலைவர் பிலிப் மியூலெர்



சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அந்த நாட்டின் முக்கிய அரசியல்வாதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் அமைதி நிலவுவதாக சுட்டிக்காட்டியே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டில் இருந்து தப்பிவந்தவர்களுக்கு சுவிட்ஸர்லாந்து தற்காலிக புகலிடம் வழங்கியது.
எனவே அவர்கள் மீண்டும் தமது நாட்டுக்கு செல்வது தொடர்பில் மீள சிந்திக்க வேண்டும் என்று சுவிட்ஸர்லாந்தின் வலதுசாரி எப்டிபியின் தலைவர் பிலிப் மியூலெர் கேட்டுள்ளார்.
போரினால் மக்கள் இடம்பெயர்ந்த போதும் நாட்டில் இயல்புநிலை ஏற்பட்ட பின்னர் அவர்கள் திரும்பிசெல்ல வேண்டும் என்பதே முக்கியமானதாகும்.
இந்தநிலையில் பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு ஒரு நாட்டுக்குள் வருவது நிராகரிக்கப்பட வேண்டும் என்று மியூலெர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் 2009ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் நிறைவடைந்ததாக அவர் நினைவுபடுத்தியுள்ளார்.