பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2015

நாமல், விமலுக்கான விசாரணைகள் இரத்து


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையில் வேட்பாளர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச ஆகிய இருவருக்கும், நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைகள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எதிர்வரும் 13ஆம் திகதியும், அவரது மனைவி சஷி வீரவன்ச நாளைய தினமும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு நாளைய தினம் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.