பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2015

அதிக விருப்பு வாக்குகளால் வெற்றிபெற்ற சி.சிறீதரன் பா.உ. அவர்களுக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு!


யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிகப்படியான விருப்பு வாக்குக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு கட்சித் தொண்டர்களினாலும் ஆதரவாளர்களினாலும் கிளிநொச்சியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிட்டு அதிகப்படியான விருப்பு வாக்குக்களால் தெரிவுசெய்யப்பட்டு முன்னிலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளைக் காரியாலயமான அறிவகத்தில் கட்சித் தொண்டர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களால் வரவேற்றுக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை 5.00 மணியளவில் கிளிநொச்சிக் கந்தசாமி கோயிலின் சமய வழிபாட்டு நிகழ்வுடன் ஆரம்பமாகி அழைத்து வரப்பட்டு கட்சிக் காரியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, கரைச்சிப் பிரதேசசபை முன்னாள் உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் கட்சியின் அமைப்பாளர்கள், கட்சித் தொண்டர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
உங்களின் பலத்தினாலேயே நான் இன்று உங்களின் முன் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். உங்களின் பலத்தினால் எமது விடுதலைக்கான இலட்சியப் பாதையில் நாம் என்றும் உறுதியோடு பயணிப்போம்.
இனி வருங்காலங்கள் எமக்கு மிகவும் முக்கியமான காலமாக அமைய இருக்கின்றமையால் நாம் மிகவும் அவதாமும் நிதானமாகவும் இராஜதந்திர அணுகுமுறைகளை மேற்கொண்டு எமது இலட்சியப் பாதையில் பயணித்து எமது விடுதலையை விரைவில் வென்றெடுப்பதற்காக உறுதியோடு செயற்படுவோம் என்று தெரிவித்தார்.