பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2015

புதிய முறை பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்


இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக் பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் பழைய பாஸ்போர்ட்டுக்குப் பதிலாக புதிய பயோமெட்ரிக் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து விட்டு பாஸ்போர்ட் அலுவலகத்தில் மணித்தியாலக் கணக்கில் காத்திருக்க நேர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாஸ்போர்ட் திணைக்களம், ஸ்டூடியோக்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை இன்டர்நெட் வழியாக பெற்றுக் கொள்வதில் சற்று கால தாமதம் ஏற்படுவதாகவும், மிக விரைவில் அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் என்றும் அறிவித்துள்ளது.
அதே நேரம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பதாரிகள் மட்டுமே திணைக்களத்தினுள் அனுமதிக்கப்படும் காரணத்தால், உடன் வருகின்றவர்கள் வெளியில் வெயிலின் தாக்கத்துக்கு மத்தியில் பல மணி நேரம் காத்திருக்க நேர்ந்துள்ளதாக முறைப்பாடு செய்கின்றனர்.