பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2015

சுசிலின் பட்டியலை ஏற்றுகொண்ட தேர்தல் ஆணையம்

நடைபெறவுள்ள பொது தேர்தலுக்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்கு சாவடி பிரதிநிதிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் பிரதிநிதிகள் சுசில் பிரேமஜயந்தவினாலே பெயரிடப்பட்டுள்ளது.
சுசில் பிரேமஜயந்தவினால் பெயரிடப்பட்டு முன்வைத்த பட்டியல் தேர்தல் ஆணையத்தினால் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் பொது செயலாளராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் விஷ்வா வரணபாலவின் நடவடிக்கைகளுக்கு முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவின் கட்டுப்பாடுகள் இல்லாமல் தொடர்வதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும் விஷ்வா வரண்சிங்கவினால் முன்னணியின் வாக்கு சாவடி பிரதிநிதிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் பிரதிநிதிகளின் பட்டியல் தேர்தல் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் வினவியபோது, கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் எவ்வித உத்தரவும் தனக்கு கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சிங்கள தொலைகாட்சி நிகழ்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது முன்னணி மற்றும் சுதந்திர கட்சியின் பொது செயலாளர்கள் மாற்றப்பட்டமை தொடர்பில் தகுந்த சந்தர்ப்பத்தில் பதிலளிப்பதாக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டமையும் குறிப்பிடத்தக்கது.