பக்கங்கள்

பக்கங்கள்

25 ஆக., 2015

குடிமக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிஸ் முதல் இடம்: ஆய்வில் தகவல்

ஐரோப்பிய நாடுகளில் குடிமக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடமும் சர்வதேச அளவில் உள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடமும் பெற்றுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கேட்டோ என்ற நிறுவனம் சர்வதேச அளவில் குடிமக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.
2015ம் ஆண்டுக்குரிய நாடுகளின் பட்டியல் தொடர்பாக சுமார் 152 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான புள்ளிவிபரங்களை அண்மையில் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டின் தனிமனித சுதந்திரம், பேச்சுரிமை, மக்களின் பாதுகாப்பு, உறவு முறைகள், மதம் மற்றும் சட்டம் தொடர்பான அரசு அணுகுமுறைகள், சர்வதேச அளவில் வணிக செய்யும் உரிமை உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், தனி நபருக்கு முழு சுதந்திரம் அளிக்கும் ஐரோப்பிய நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது.
சர்வதேச அளவில் உள்ள நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் குடிமக்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல்:
1. ஹோங் காங் (சீனாவில் உள்ள சுயாட்சி மாகாணம்)
2. சுவிட்சர்லாந்து
3. பின்லாந்து
4. டென்மார்க்
5. நியூசிலாந்து
6. கனடா
7. அவுஸ்ரேலியா
8. அயர்லாந்து
9. பிரித்தானியா
10. ஸ்வீடன்
இதே பட்டியலில் ஜேர்மனி -12, அமெரிக்கா -20, பிரான்ஸ் -33, ஸ்பெயின் -37வது இடங்களை பெற்றுள்ளது.
ஆசிய நாடுகளான இலங்கை 122-வது இடத்திலும், இந்தியா 75-வது இடத்திலும் உள்ளது.
குடிமக்களுக்கு சுதந்திரம் வழங்கும் 152 நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தை ஈரான் நாடு பெற்றுருப்பது குறிப்பிடத்தக்கது.