பக்கங்கள்

பக்கங்கள்

21 ஆக., 2015

மரியாதை செலுத்திய இந்திய வீரர்கள்: மனம் நெகிழ்ந்து போன சங்கக்காரா


கொழும்புவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 393 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் 2 வது ஓவரின் முதல் பந்தில் கருணாரத்னே வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய சங்ககாராவிற்கு இந்திய அணியின் அனைத்து வீரர்களும் வரிசையாக நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.
இதில் போட்டி நடுவர்கள் அவுஸ்திரேலியாவின் ஆக்ஜென்போர்டும் டியூக்கரும் கலந்து கொண்டு சங்ககாராவுக்கு மரியாதை செய்தனர்.
இந்திய அணியின் மரியாதையை பார்த்து சங்ககாரா மனம் நெகிழ்ந்து போனார்.