பக்கங்கள்

பக்கங்கள்

19 ஆக., 2015

தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் திருமணம்! (படங்கள்)



தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் ஆகிய இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

தினேஷ் கார்த்திக்கும் தீபிகா பல்லிகலும் காதலிக்கிறார்கள் என்று சில வருடங்களுக்கு முன்பு செய்தி வந்தபோது அது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. செய்தி வந்த வேகத்தில் உடனே இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அவரவர் தொழிலில் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, 2013 நவம்பரில் நிச்சயதார்த்தம் நடந்தாலும் 2015ல் தான் திருமணம் என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, ஆகஸ்ட் 18 அன்று இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படியும் ஆகஸ்ட் 20 அன்று தெலுங்கு நாயுடு முறைப்படியும் திருமணம் நடக்க திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. நாளை மீண்டும் தெலுங்கு நாயுடு முறைப்படி திருமணம் நடக்க உள்ளது.