பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2015

புழல் சிறையில் மாணவர்களுடன் விஜயகாந்த் சந்திப்பு


கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள  மாணவர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து பேசினார்.

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரிக்கு பின்புறம் ஹாரிங்டன் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு மதுக்கடையை முற்றிலுமாக சூறையாடினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 மாணவிகளும், 10 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் 15 மாணவ – மாணவிகளும் அடைக்கப்பட்டனர்.

இன்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புழல் சிறை சென்று மாணவ, மாணவிகளை சந்தித்துப்பேசினார். இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்து நேரில் சந்தித்து பேசினார்.