பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2015

நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது



கேரள அரசின் 45வது சினிமா விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன.  சிறந்த நடிகர் விருதை ‘பெங்களூர் டேஸ்’, ‘1983’ ஆகிய படங்களில் நடித்ததற்காக நிவின் பாலியும், ‘மை லைப் பார்ட்னர்’ படத்தில் நடித்ததற்காக சுதேவ் நாயரும் பகிர்ந்துகொள்கின்றனர். நிவின் பாலி, தமிழில் ‘நேரம்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

‘பெங்களூர் டேஸ்’, ‘ஓம் சாந்தி ஓஷானா’ ஆகிய படங்களுக்காக நஸ்ரியா, சிறந்த நடிகை விருதை பெறுகிறார். இவர், தமிழில் ‘ராஜாராணி’, ‘நேரம்’, ‘நய்யாண்டி’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ போன்ற படங்களில் நடித்தவர்.

தேசிய விருது பெற்ற ‘ஒட்டாள்’ படம், சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ‘ஒய்ட் பாய்ஸ்’ படப் பாடலுக்காக சிறந்த பாடகர் விருதை ஜேசுதாஸ் பெறுகிறார்.