பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2015

எதிர்க்கட்சித் தலைவராக சமல் ராஜபக்ச?


முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக நம்பத் தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி நாடாளுமன்றம் கூடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு செய்யப்படுவார்.
எவ்வாறாயினும் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.பி. திஸாநாயக்க தெரிவு செய்யப்படலாம் என்றும் முன்னர் தகவல் வெளியாகி இருந்தது.
தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த எஸ்.பி. திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.