பக்கங்கள்

பக்கங்கள்

22 ஆக., 2015

சுதந்திரக் கட்சியின் பத்து உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பத்து உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய பத்து உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளது.
கடந்த சில மாதங்களாக கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டமை, கட்சியின் தீர்மானங்கள் இணக்கப்பாடுகளை ஊடகங்களில் விமர்சனம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
விசாரணைகளுக்காக ஊடக நிறுவனங்களிடமிருந்து ஒளி ஒலிப்பதிவு நாடாக்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் கட்சியை விமர்சனம் செய்தமை குறித்த தகவல்களை திரட்டுதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விரைவில் இந்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.