பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2015

விடுதலைப் புலிகளால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை


விடுதலைப் புலிகளால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும், அவர்களின் நகர்வுகள் அனைத்தும் தம்மால் கன்காணிக்கப்படுவதாகவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்