பக்கங்கள்

பக்கங்கள்

3 ஆக., 2015

கீழ்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவ-மாணவிகள்


சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவ - மாணவிகள் இன்று காலையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திடீர்
போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக்கு பின்புறம் உள்ள வைத்தியநாதன் சாலையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் திரண்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர்.

அப்போது அருகில் இருந்த டாஸ்மாக் கடையில் மாணவர்களில் ஒரு பிரிவினர் திடீரென்று புகுந்து கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். அப்போது மாணவர்களும், மாணவிகளும் புத்தகத்தை படிக்கவா? சாராயத்தை குடிக்கவா? என்று கோஷங்களை எழுப் பினார்கள்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கீழ்ப்பாக்கம் போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வில்லை. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் மாணவ-மாணவிகள் நாலா புறமும் சிதறி ஓடினார்கள். இதில் ஒரு சிலர் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு பதட் டம் நிலவுவதால் ஏராள மான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.