பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2015



தேசியமட்ட போட்டிகளின் ஒரு பிரிவான குத்துச் சண்டைப் போட்டிகளில் 15வயதுப்பிரிவில் இருவரும் 17வயதுப்பிரிவில் ஒருவருமாக
மொத்தம் மூன்று தமிழ் மாணவர்கள் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
15வயதுப் பிரிவில் (35d37 கிலோ) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்து களமிறங்கிய ஜெகதீஸ்வரன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றிய அதேநேரம் அதே பாடசாலையை பிரதி நிதித்துவம் செய்து களமிறங்கிய றுபன் (39d41 கிலோ) வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
17 வயதுப்பிரிவில் காட்லிக் கல்லூ ரியைப் பிரதிநிதித்துவம் செய்து கள மிறங்கிய விஷ்ணு (52d54 கிலோ) வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். குத்துச்சண்டைப் போட்டி யில் முதல்முறையாக தேசியத்தை எட்டிய வடமாகாணத்துக்கு முதல் தடவையிலேயே இப்பதக்கங்கள் கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக் கது.