பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2015

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா!

கொழும்பு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணி தொடரை கைப்பற்றுவது இதுவே முதல் முறை.

கொழும்பு  நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 386  ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. நேற்று 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தவித்தது. 5வது நாளான இன்று பெரைராவும், ஏஞ்சலா மேத்யூசும் இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 135 ரன்களை சேர்த்து இந்திய வெற்றியை பறித்து விடுமோ? என்ற பயத்தை ஏற்படுத்தியது.
குஷால் பெரைரா 70 ரன்களில் அவுட் ஆனார். ஏஞ்சலா மேத்யூஸ், தனி ஆளாக நின்று சமாளித்து பார்த்தார். மேத்யூஸ் 110 ரன்களில் இஷாந்த் பந்துவீச்சில்  அவுட் ஆனார். இது இஷாந்த் சர்மாவின் 200வது விக்கெட் ஆகும். இதனால் இலங்கை அணி, மீண்டும் தோல்வியை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. ஹெராத் (11) கவுஷால் ( 1)  பிரசாத் (6 ) ரன்களில் அவுட் ஆனார்கள்.
இறுதியில் இலங்கை அணி  85 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி 117 ரன்களில் வெற்றி பெற்றது. இதற்கு முன் இலங்கையில் கடைசியாக இந்திய அணி 1993ம் ஆண்டு டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தது.
அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, 3 டெஸ்ட் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றிருந்தது.  அதற்கு பின், இலங்கை மண்ணில் இன்னொரு டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணி 22 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டியது இருந்துள்ளது.
இந்திய தரப்பில் அஸ்வின்( 4 ) இஷாந்த் சர்மா (3)  விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் (2)  மிஷ்ரா( 1 ) விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.இந்த போட்டியை பொறுத்த வரை புஜாரா சதம் அடிக்கவில்லையென்றால், இந்திய அணியின் வெற்றி சாத்தியமில்லை.எனவே ஆட்ட நாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதை அஸ்வின் பெற்றார். 
இந்த போட்டியில் இசாந்த் சர்மா 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை  வீழ்த்தியது இலங்கையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்து வீச்சாக அமைந்தது. ஆனால் இஷாந்த் ஷர்மா நிதானத்தை கடை பிடித்திருக்கலாம். இந்த தொடர் முழுவதுமே ஆக்ரோஷத்தையே அவர் வெளிப்படுத்தினார். 

 முதல் இன்னிங்சில் இந்திய அணி -312

முதல் இன்னிங்சில்ல் இலங்கை அணி -201

2வது இன்னிங்சில் இந்திய அணி - 274

2வது இன்னிங்சில் இலங்கை அணி-  268