பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2015

தேசிய புனித தலமாக சபரிமலை ஐயப்பன் கோயில் விரைவில் அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் விரை வில் தேசிய புனித தலமாக அறிவிக் கப்படும் என்று மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர்
மகேஷ் சர்மா கூறினார். கேரள மாநிலம் பத்தனம் திட்டை மாவட்டத்தில் சபரி மலை ஐயப்பன் கோயில் உள்ளது. கேரளா மட்டுமன்றி தமிழகம், ஆந் திரா கர்நாடகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்ற னர்.
மாதம் தோறும் 5 நாட்கள் கோயில் நடை திறந்திருக்கும். இது தவிர மண்டல மகரவிளக்கு பு+iஜகளை ஒட்டி அதிக நாட்கள் கோயில் நடை திறக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலை தேசிய புனித தலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் கேரள அமைச்சர்கள், பிரதமர் மோடியை சந்தித்து இது தொடர் பாக கோரிக்கை விடுத்தனர்.
அப்போது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோடி உறுதியளித்தார். இந்நிலையில் மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா டில்லியில் கூறுகையில், சபரிமலை ஐயப் பன் கோயிலை தேசிய புனித தலமாக அறிவிக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும். மத்திய சுற்றுலா துறை யின் கீழ் உள்ள பிரசாத் திட்டத்தின் கீழ் இது செயல் படுத்தப்படும் என்றார்