பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2015

யங்ஸ்ரார், மருதநிலா அணிகளுக்கு வெற்றி

வவுனியா லீக்கின் முதற்தர அணிகளுக்கு இடையில் பண்டாரவன்னியன் கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட 7 வீரர்கள் பங்குபற்றும் லீக் மு
றையிலான உதைபந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.
இந்தத்தொடரில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஆட்டங்களில் முதலாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் யங்ஸ்ரார் அணியை எதிர்த்து ஈஸ்வரன் அணி மோதியது. இதில் யங்ஸ்ரார் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் மருதநிலா அணியை எதிர்த்து கோல்டன் பிரதர்ஸ் அணி மோதியது. இதில் மருதநிலா அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.