பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2015

சம்பளப் பணத்தை நன்கொடையளிக்கவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்


வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தனது சம்பளப் பணத்தை ஏழைகளுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள் அவர்,
கடந்த யுத்த கால கட்டம் காரணமாக வன்னி மாவட்டம் கடுமையான பாதிப்புகளுக்கு முகம்கொடுத்துள்ளது. அங்குள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தமது பிள்ளைகளுக்கு உரிய கல்வியைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் பெற்றோர் வறுமையால் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் என்னை தங்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் செய்யும் நன்றிக் கடனாக எனது சம்பளப் பணம் முழுவதையும் நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளேன்.
அதிலும் மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளை எனது முதலாவது தெரிவாகக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது