பக்கங்கள்

பக்கங்கள்

30 செப்., 2015

பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் ஒருவரை, நடுவர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரேசில் நாட்டிலுள்ள பேளோ ஹாரிஜொந்தே அருகேயுள்ள புருமாண்டினோவில், உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், அமெச்சூர் புருமாண்டினோ அணியும், அமண்டஸ் டா பேளோ அணியும் மோதின. கேப்ரில் முர்தா என்பவர் நடுவராக இருந்தார்.
அப்போது அமண்டஸ் டா பேளோ அணி வீரர் ஒருவருக்கும், நடுவர் கேப்ரில் முர்தாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நடுவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி, கால்பந்து வீரரை மிரட்டினார். மேலும், அந்த வீரரை உதைத்து தள்ளி கன்னத்திலும் அறைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அணியின் மேலாளர் தலையிட்டு, வீரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதையடுத்து நடுவர் கேப்ரில் முதர்தாவுக்கு கால்பந்து சங்கம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த சம்பவத்தால் அந்த மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.