பக்கங்கள்

பக்கங்கள்

21 செப்., 2015

யாழ்தேவி ரயில் இன்றும் தடம்புரண்டது! வடக்கிற்கான ரயில் பயணம் முழுமையாக பாதிப்பு


யாழ்தேவி ரயில் இன்று காலை தடம்புரண்டுள்ளதன் காரணமாக வடக்கிற்கான ரயில் போக்குவரத்து இன்று முழுநாளும் பாதிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தை அண்மித்த தலாவ- சிராவஸ்திபுர ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று காலை யாழ்தேவி ரயில் தடம்புரண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றி ரயில் தண்டவாளங்களை சீரமைத்து ரயில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவற்கான முயற்சிகள் இன்று மாலை வரை வெற்றியளிக்கவில்லை.
இதன் காரணமாக இன்று முழுதும் வடக்கிற்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பிலிருந்து யாழ். செல்லும் ரயில்கள் தலாவை வரையிலும், வடக்கிலிருந்து கொழும்பு வரும் ரயில்கள் சிராவஸ்தி ரயில் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் இதன் காரணமாக பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.