பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2015

அரச ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் ஊடக அமைச்சர் கலந்துரையாடல்


நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, அரச ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
கொழும்பு-05  நாராஹேன்பிட்டவில் அமைந்துள்ள ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்தக் கலந்துரையாடல் இன்று காலை நடைபெற்றுள்ளது.
ஜெனீவா அறிக்கை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை போன்ற விடயங்களில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு அரச ஊடகங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதே இந்த கலந்துரையாடலின் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அரச ஊடக நிறுவனங்களின் குறைபாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகளுக்கான தேவைகள் குறித்தும் ஊடக நிறுவன முக்கியஸ்தர்களிடம் அமைச்சர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.