பக்கங்கள்

பக்கங்கள்

26 செப்., 2015

சர்வதேச விசாரணை தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்கணிப்பு நடத்தவேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள சர்வதேச மத்தியஸ்தத்துடனான விசாரணை குறித்து பொதுமக்கள் கருத்துக் கணிப்பொன்றை நடத்தவேண்டும் என்று ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசப்பற்றாளர்களின் கலந்துரையாடல் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இலங்கைப் பிரஜை ஒருவர் குறித்து வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றின் ஊடாக வழக்குகளை விசாரிக்கவோ, தண்டனை வழங்கவோ செய்வதாயின், அது குறித்து பொதுமக்கள் கருத்துக் கணிப்பொன்றை நடத்த வேண்டும்.
இலங்கையிலுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாடாளுமன்றத்தில் மூன்று இரண்டு பெரும்பான்மைப் பலம் மட்டும் இருந்தால் போதாது. அவ்வாறு பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்றப்பட்டாலும் பொதுமக்கள் கருத்துக்கணிப்பின் பின்னரே அதனைச் செயற்படுத்த முடியும் என்றும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.