பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2015

இலங்கை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தை மத்திய அரசு ஆராய்கிறது: இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்


இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வரைவை ஆராய்ந்த பின்னர், எடுக்க போகும் முடிவுக்கு அறிவிப்பதாக இந்திய கப்பல்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் நடத்த போர் குற்றங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் கடந்த புதன் கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் பொன். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்