பக்கங்கள்

பக்கங்கள்

1 செப்., 2015

ஜெயலலிதாவை சந்தித்து நன்றி கூறிய சிவாஜி குடும்பத்தினர்




சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த ஜெயலலிதாவை, நடிகர் பிரபு தனது குடும்பத்தோடு சந்தித்து நன்றி தெரிவித்தார்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார்.

இதையடுத்து, சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபு, தனது குடும்பத்தினருடன், ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து மலர்கொத்து வழங்கி நன்றி தெரிவித்தார்.